Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

vettuva_history [2017/12/10 16:18]
vettuva_history [2017/12/10 16:18] (current)
Line 1: Line 1:
 +
 +
 +
 +கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது
 +முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,​வெற்பன்,​சிலம்பன்,​எயினன்,​ ஊரான்,​
 +வேட்டுவதியரையன்,​ஊராளி,​நாடாழ்வான்,​ முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்.
 +
 +
 +======கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு ======
 +
 +
 + ​=====ஆதாரங்கள் =====
 +கல்வெட்டுக்கள்,​செப்பேடுகள்,​புராணங்கள்,​இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர்,​வெங்கம்பூர்,​திருச்செங்கோடு,​ஈரோடு,​ஏழூர்,​மூக்குத்திபாளையம்,​பருத்திபள்ளி,​வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை,​அவினாசி,​திருமுருகன் பூண்டி,​இரும்பறை,​பழமங்கலம்,​அந்தியூர்,​சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும் தென்னிலை,​ ஊசிப்பாளையம்,​திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,​சோழன் பூர்வபட்டயமும்,​ இலக்கியங்களும்
 +வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும்,​புலிக்குத்திக் கற்களும் வேட்டுவரின் வீரத்தைப் பறை சாற்றுகின்றன.
 +
 + ​=====பூர்வீகம் =====
 +இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார்.
 +புராணங்களும்,​பழங்கதைகளும் இவர்களை குருகுலத்தவர் எனச் சுட்டும்.சைவ நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரின் கால்வழியினரே வேட்டுவர் எனக்கருதுவோரும் உண்டு.இருப்பினும் இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் (ஆதிகுடிகள்) என்பதுறுதி.
 +வேட்டுவர் பிரமனால் படைக்கப்பட்ட ஆதிவமிசத்தார் என்று வேளாளர் புராணம் கூறும்.வேறு சில பட்டயங்கள் வேட்டுவர் முத்தரையரின்(முத்துராஜா) கால்வழியினர் எனச்செப்புகின்றன.முத்தரையரும்,​ வேட்டுவரும் கண்ணப்பநாயனாரைத் தமது குலதெய்வமாக
 +வணங்கி வருவதும் சிந்திக்கத்தக்கது.எட்கர் தர்ஸ்டன் அவர்களும் முத்தரையர்,​வேட்டுவர்,​வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் ​
 +சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.
 +
 +இவர்களுள் 1.வேட்டுவன்,​ 2.வேடன்,​ 3.காவிலவன்,​ 4.மாவிலவன்,​ 5.பூவிலவன் எனும் ஐந்து பெரும் பிரிவுகள் இருந்தன.பிற்காலத்தில் இவர்கள் கவுண்டர் எனும் பட்டத்தைப் புனைந்து கொண்டனர்.
 +
 +வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும் குகை ஓவியங்களும் கொங்கு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 +இவற்றில் சித்திரிக்கப்பட்டிருக்கும் வேட்டைக்காட்சிகள்,​ வேட்டுவரின் வாழ்கை முறையைச் சித்திரிப்பதாகவே உள்ளன.கொங்கு நாட்டில்
 +காணப்படும் ஈமச்சின்னங்களும்,​ புதைகுழிகளும்,​ இறந்தோர் நினைவுகற்களும்,​ பெருங்காலச் சின்னங்களும் வேட்டைத் தொழிலை
 +மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும்.
 +
 +=====சங்க காலம்=====
 +சங்க காலத்தில் இவர்கள் வேட்டையாடுவதையும் ஆடுமாடு மேய்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர்.அதே சமயத்தில் சிலர்
 +போர்ப்படைகளில் வீரர்களாகப் பணிபுரிந்து,​தமது வில்லாற்றலை வெளிக்காட்டினர்.அதே காலகட்டத்தில் வேட்டுவ குழுத்தலைவர்
 +சிலர் குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்தனர். எடுத்துக்காட்டாகக் கோடை மலைத் தலைவனான கடிய நெடுவேட்டுவன்,​தோட்டி மலைதிதலைவனான கண்டீரக்கோப் பெருநற்கிள்ளி,​கொல்லி மலைத்தலைவனான வல்வில் ஓரி,​கொடுமுடி முதலியோரைச் சுட்டலாம்.
 +சிலர் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும் விளங்கினர்.
 +
 +=====முன்னேற்றம்=====
 +ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருள் பலர்,​சிலகாலம் சென்ற பின்னர்
 +ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர்.உணவு தேடும் நிலையை விட்டு உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர்.சமவெளிகளில்
 +வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டனர்.இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம்.இவர்களை வெளாளர்(வேளாளர்)
 +என சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றனர்.வரலாற்றுத் தொடக்க காலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட இவர்கள்,​ இடைக்காலத்தில் வேளாண்மையில் நாட்டம் கொள்ளும் அளவிற்கு உயர்ந்தனர்.
 +
 +=====சோழர் காலம்=====
 +கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று,​ கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். ​ இதன் விளைவாகக் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த வேட்டுவத் தலைவர்கள்,​ சோழரது படைத்தலைவர்களாக மாற்றப்பட்டனர். சோழர்கள் கொங்கு நாட்டில் வேளாண்மையைப்பெருக்க பல அரிய முயற்சிகளை மேற்கொண்டனர். சோழரின் ஆதிக்கம் கொங்குநாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு முனை எனலாம். ​
 +
 +=====சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை=====
 +கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில்,​ வேளாளர்கள் மிகச் சிறந்த முறையில் வேளாண்மையை முன்னேற்றி,​ உணவுப் பொருள்களை
 +உற்பத்தி செய்து,​பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறினர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் பொருளாதார நிலை
 +சிறிது தாழ்ந்தது. சில இடங்களில் வேட்டுவர்க்கும்,​ வேளாளர்க்கும் போட்டியும் பூசல்களும் ஏற்பட்டன. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில்
 +இருவர்க்குமிடையே சமரசமும்,​ சமாதானமும் ஏற்பட்டன. வேட்டுவரின் நில உரிமைகளும்,​கோயில் வழிபாட்டு,​ முப்பாட்டு உரிமைகளும்
 +வேளாளர் கைக்கு மாறின.வேட்டுவர்-வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம்,​ வேளாளரின் பொருளாதார உயர்ச்சி
 +ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர்.
 +
 +=====வேட்டவூர்,​பூலுவ ஊர்,​பூலுவ நாடு=====
 +வேளாளரைப் போன்று வேட்டுவரும் தமக்கெனத்தனியான சமூக அவைகளைக் கொண்டிருந்தனர்.வேளாளர் ஊர் அளவில் வெள்ளாளனூர்
 +(வேளாளர் ஊர் அவை) அமைப்பைப் பெற்றிருந்தது போன்று வேட்டுவரும் வேட்டவூர் (வேட்டுவர் ஊர் அவை) அல்லது பூலுவ ஊர்
 +எனும் அமைப்புக்களைக் கொண்டிருந்தனர். அடுத்து பூலுவ ஊரார் இணைந்து பூலுவ நாடு எனும் நாட்டர் அவையையும் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக அன்னூரிலிருந்து பூலுவ ஊர், சேவூரிலிருந்து பூலுவ ஊர், திங்களூரில் இருந்த வேட்டவூர்,​ விசயமங்கலத்தில் செயல்பட்டு வந்த வேட்டவூரைச் சுட்டலாம்.
 +
 +வேட்டுவ வீரர் பலர் சோழரது படையில் பணிபுரிந்து,​ சோழரது மேலாதிக்கம் பரவ பாடுபட்டனர். எடுத்துக்காட்டாக அழகன் காளி எனும்
 +வேட்டுவத் தலைவன் முதல் இரசேந்திர சோழனின் வெற்றிக்காகப் போராடி வீர மரணம் அடைந்ததனைக் குறிப்பிடலாம். இதனைக்
 +கூறும் தூக்காச்சிக் (ஈரோடு வட்டம்) கல்வெட்டைக் கீழே காண்போம்.
 +
 +              “ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
 +              சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
 +              ........ஊராளி வேட்டுவன் அழகன்
 +              காளி அவன் இதில் பட்டான்.”
 +
 +சோழருக்குப் பின்னர்
 +சோழரை அடுத்துப் பிற்காலப் பாண்டியரும் ஒய்சாளரும் கொங்கு நாட்டில் மேலாண்மை செலுத்தினர். பாண்டியர் வில்லாற்றல் மிக்க
 +வேட்டுவ வீரர்களைப் பெருமளவில்,​ தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன்,​ திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது
 +பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம்.
 +இதோ அக்கல்வெட்டு.
 +
 +            “ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
 +            தேவற்கு யாண்டு 6 – வது
 +            வடகரை நாட்டு உரகடங்கச்சதி
 +            கண்ணையன் வேட்டுவரில்
 +            அந்தியூரன்”
 +
 +=====பட்டக்காரர்கள்=====
 +விசயநகர வேந்தரது ஆதிக்கம் கொங்கு நாட்டில் பரவிய போது,​ வேட்டுவரும் வேளாளரும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.
 +இவர்கள் பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டு பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர்,​ தென்னிலை,​ காக்காவாடிப் ​
 +பட்டக்காரர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இதே காலக்கட்டத்தில் வேட்டுவத் தலைவர் சிலர் அரண்மையாளர்களாகவும் திகழ்ந்தனர்.
 +இவர்களுள் கொடையூர் சீத்தப்பட்டி,​ நிமந்தப்பட்டி,​ நவமரத்துபட்டி,​ நல்லகுமரன் பட்டி,​ இழுப்பக்கிணத்துப்பட்டி,​ அரண்மனையாளர்கள்
 +புகழுடன் விளங்கினர். வேட்டுவத் தலைவருள் பலர் காணியாளர்களாகவும் ஊராளிகளாகவும் திகழ்ந்தனர். இதனைப் பல கல்வெட்டுக்கள்
 +உறுதி செய்கின்றன.
 +
 +மேற்கூறியவற்றான் வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்டிருந்த வேட்டுவர்,​ நாளடைவில் படைவீரர்களாகவும்படைத் ​
 +தலைவர்களாகவும்,​ காணியாளர்களாகவும்,​ ஊராளிககளாகவும்,​ திகழ்ந்தமை அறியப்படுகின்றன. சிலர் காடுகளை அழித்து கழனிகளாக
 +மாற்றி வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டனர் இவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதும் வாழ்ந்து வந்த போதிலும் வடகொங்கில் அதிக
 +எண்ணிக்கையில் இருந்தனர். காவிரி,​ நொய்யல்,​ அமராவதிப்படுகைகளில் அவர்களது குடியிருப்புகள் மிகுதியாகவே இருந்தன.
 +
 +=====வேட்டுவரின் குலப்பிரிவுகள்=====
 +வேர்வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது – என்பது பழமொழி. ஆம் வேட்டுவரிடையே எண்ணிறந்த ​
 +குலப்பிரிவுகள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறிகிறோம். இது காறும் ஏறத்தாழ 203 வேட்டுவரது
 +குலப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 +
 +=====வேட்டுவரின் வீரப்பண்பு=====
 +கொங்கு நாட்டில் காணப் பெறுகின்ற நடுகற்கள்,​ புலிக்குத்திக் கற்கள் ஆகியன வேட்டுவரின் வீரத்தையும்,​ அஞ்சாமையும் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக கரையகுல சொக்கனின் பெருவீரத்தைப் போற்றிப் புகழும் பழமங்கலம்(பெரியார் மாட்டம்)
 +நடுகல் கல்வெட்டைச் சுட்டலாம். அக்கல்வெட்டைக் கீழே காண்போம்.
 +
 +                “வாய்த்த புகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
 +                சாய்த்த மருள் வென்ற சயம்பெருகச் சீர்த்த புகழ்
 +                நிக்குவனம் கற்பொறிக்கப்பட்டான் கரைய குலச்
 +                சொக்கனேந்தலேவுலகிற் காண்.
 +                இக்கற்பொறி ரகூஷிப்பான் பாதம்என் தலை மேலே”
 +
 +“வெட்ட வெட்டத் தலைக்குது வேட்டுவர் படை எனும்” முதுமொழியும் வேட்டுவரின் வீரத்திற்கோர் இலக்கியமாகத் திகழ்கிறது.
 +
 +புலியைக் குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதன் நினைவாகக் கொங்கு யநாட்டில் பல புலிக்குத்திக்கற்கள்
 +காணப்படுகின்றன. புலியைக் குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமதுபெயருடன் சூட்டிக்கொண்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிகுத்திதேவன் எனக் குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.
 +
 +=====வேட்டுவரின் பொதுப்பணி=====
 +கால்வாய் வெட்டுதல்,​ அணைகட்டுதல்,​ குளம் வெட்டுதல்,​ நீர்பாசனத்தைப் பெருக்குதல்,​ ஊரில் புகுந்து மக்களுக்கும்,​மாக்களுக்கும்,​
 +தீங்கு விளைவிக்கும் கொடிய மிருகங்களைக் கொல்லுதல் – முதலான பொதுப்பணிகளிலும் வேட்டுவர் ஈடுபட்டிருந்தனர் என்பதைக்
 +கல்வெட்டுச் சான்றுகளால் அறியலாம். வேளாண்மையின் உயிர்நாடியாக,​ அச்சாணியாக விளங்கும் நீர்பாசனத்தைப் பெருக்குவதில்
 +வேட்டுவத் தலைவர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
 +
 +சேலம் மாவட்டம் வடகரை ஆற்றூரில் வாழ்ந்து வந்த அல்லாளன் இம்முடித்திருமலை இளையான்,​ காவிரியிலிருந்து ராஜ வாய்க்கால்
 +எனும் கால்வாயை வெட்டினான்,​ ஜேடர் பாளையத்திலிருந்து வேலூர் வழியாகப் பாலப்பட்டி வரை சென்று ஒடுவந்தூரில் முடிவடையும்
 +இது காவிரியில் வெட்டப்பட்ட முதல் கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.
 +
 +பூச்சந்தை வேட்டுவன் பெரிய பெருமாள் முத்தாண்டன் என்பான்,​ வடபரிசார நாட்டு நவிரையான கப்பலன் கிடாரன் எனும் ஊரில்
 +தாமரைக்குளம் ஒன்று வெட்டினான். பெரிய விளங்கி ஊராளியான சுண்டை வேட்டுவன் எழுகரை நாட்டில் அக்கசாலைக் கங்கை
 +எனும் பெயரில் குளம் ஒன்று வெட்டினான். இதனைக் கீழ்காணும் கல்வெட்டு விளக்குகிறது.
 +
 +             ​“ஸ்வஸ்தி ஸ்ரீ எழுகரை நாட்டு அக்கைசாலை
 +             ​கங்கை என்று பேரிட்டு இக்
 +             ​குளம் அட்டினேன் பெரிய விலங்கி
 +             ​ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
 +             ​சிலம்பன் சிறியன் ஆன எழுக
 +             ​ரை நாட்டு அக்கை சாலைகள் மாத்த
 +             ​ஆராத பிள்ளையேன் பேர் மலை”
 +
 +(சேலம் மாவட்டம்,​ மூக்குத்தி பாளையம் அருகில் மோழப்பறையில் உள்ளது)
 +
 +இதனைப் போன்று வேட்டுவர் நீர்பாசனத்தைப் பெருக்க பல பணிகளைச் செய்துள்ளனர் என்பது கல் வெட்டுகளால் புலனாகிறது.
 +
 +=====இறைப்பணி=====
 +பொதுப்பணியில் பேரார்வம் காட்டிய வேட்டுவர் திருக்கோயில்களைக் கட்டுவதிலும்,​ அதில் புதிய கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதிலும்,​ இறைவனது திருவுருவங்களை எழுந்தருளச் செய்வதிலும்,​ கோயில் வழிபாடு சிறப்புற நடைபெற நிலக்கொடைகள்
 +விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இதனைக் கல்வெட்டு ஆதாரங்களால் அறியலாம். எடுத்துக்கட்டாகப் பெரியார் மாவட்டம் அறச்சலூர்க்
 +கல்வெட்டை சுட்டாலாம். இதோ அக்கல்வெட்டு.
 +
 +            “ஸ்வஸ்திஸ்ரீ ஒய்சள புஜபல வீரவல்லாள
 +            தேவர்பிருத்வி ராஜ்யம் பண்ணி ஆருளா
 +            நின்ற யுவ சம்வத்சரத்துத் தை
 +            மாதத் தொருநாள் மேல்கரைப்
 +            பூந்துறை நாட்டு அறச்சலூரில்
 +            கரைய வேட்டுவரில் செய்யான்
 +            பல்லவரையனேன் இவ்வூர் புற்றிடங்
 +            கொண்டநாயனார் கோயிலில்
 +            திருக்கட்டளையில் திருநிலைக் காலும்
 +            படியும் செய்வித்தேன்.”
 +            ​
 +           ​(புலவர் செ.இராசு அவர்கள் படித்தது)
 +வெங்கட்சி வேட்டுவன் ஒருவன் சங்ககிரி வட்டத்திலுள்ள மருதூரில் காளியம்மன் கோயிலைக் கட்டினான். அதியமான் நடுவில் நங்கன்
 +என்பான் பருத்திபள்ளிச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான். கல்லை வேட்டுவனான குறுஞ் சொக்கன் உலகடம் உலகேஸ்வரர் கோயிலில்
 +அர்த்த மண்டபத்தையும்,​ பின்னப்படுத்தப்பட்ட இத் திருக்கோயிலைப் புதுப்பித்துக் குடமுழுக்கும் செய்வித்தான்.(கி.பி.1643)
 +
 +=====வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்=====
 + அண்டை வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர்
 + அந்தி வேட்டுவர் அக்னி வேட்டுவர்
 + அந்துவ வேட்டுவர் அன்னல் மீளவேட்டுவர்
 + அல்லாள வேட்டுவர் ஆப்ப வேட்டுவர்
 + அமர வேட்டுவர் இரும்புலி (இரும்புளை) வேட்டுவர்
 + ஆமை வேட்டுவர் இந்திர வேட்டுவர்
 + இலங்கை வேட்டுவர் உண்ணாடி வேட்டுவர்
 + ஈங்குறு வேட்டுவர் உதிர வேட்டுவர்
 + உண்ணாடி வேட்டுவர் உம்பி வேட்டுவர்
 + உத்திர வேட்டுவர் உயிர் வேட்டுவர்
 + உயர வேட்டுவர் உறுமுக வேட்டுவர்
 + உரிமைப் படை வேட்டுவர் கஞ்சி வேட்டுவர்
 + ஊராளி வேட்டுவர் கதிரிகளனை வேட்டுவர்
 + கதிப்ப வேட்டுவர் கரட்டு வேட்டுவர்
 + கதுகாலி வேட்டுவர் கருவளி வேட்டுவர்
 + கரடி வேட்டுவர் கரும் புனித வேட்டுவர்
 + கரிப்படை வேட்டுவர் கரைய வேட்டுவர்
 + கருவண்ட வேட்டுவர் கவுண்டி வேட்டுவர்
 + களங்க வேட்டுவர் கள்ளை வேட்டுவர்
 + கற்பூர வேட்டுவர் கன்னி வேட்டுவர்
 + காக்காவாடி வேட்டுவர் காச வேட்டுவர்
 + காட்டு வேட்டுவர் காரி வேட்டுவர்
 + காவலர் காவலன் குறும்பில்லர்
 + காவலன் மன்றாடி காவலன் மேலைக் கறையர்
 + காவலன் வளவர் காவலர் வெண்கொற்றர்
 + காடை வேட்டுவர் காரிய வேட்டுவர்
 + காழைய வேட்டுவர் கிழங்க வேட்டுவர்
 + கீரந்தை வேட்டுவர் கீரை வேட்டுவர்
 + குடுமி வேட்டுவர் குருக்கல் வேட்டுவர்
 + குளுவ வேட்டுவர் குறுங்காடை வேட்டுவர்
 + குறும்ப வேட்டுவர் குறுண்டி வேட்டுவர்
 + குன்னாடி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர்
 + கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர்
 + கொடுகத்தாளி வேட்டுவர் கொட்டாப் புலி வேட்டுவர்
 + கொடுமுடி வேட்டுவர் கோமுக வேட்டுவர்
 + கொல்லி வேட்டுவர் கொன்றை வேட்டுவர்
 + கோதண்ட வேட்டுவர் கோமாளி வேட்டுவர்
 + கௌதாரி வேட்டுவர் சரக்கு வேட்டுவர்
 + சர்க்கரை வேட்டுவர் சாக்களி வேட்டுவர்
 + சாதி வேட்டுவர் சாந்தப்படை வேட்டுவர்
 + சித்ச வேட்டுவர் சித்த வேட்டுவர்
 + சிலை வேட்டுவர் சிறத்தலை வேட்டுவர்
 + சுண்ட வேட்டுவர் சுரண்டை வேட்டுவர்
 + சுல்லி வேட்டுவர் சுறண் வேட்டுவர்
 + செங்கண் வேட்டுவர் செம்ப வேட்டுவர்
 + சேதாரி வேட்டுவர் சேர வேட்டுவர்
 + சொட்டை வேட்டுவர் சொர்ண வேட்டுவர்
 + தழும்ப வேட்டுவர் தரைய கரைய
 + தாலி வேட்டுவர் திட்ட வேட்டுவர்
 + தும்பை வேட்டுவர் துர்க்கை வேட்டுவர்
 + பள்ள வேட்டுவர் பம்பை வேட்டுவர்
 + பரந்தை வேட்டுவர் பருத்தி வேட்டுவர்
 + பௌத்ரம் வேட்டுவர் மணிய வேட்டுவர்
 + மலைய வேட்டுவர் மந்திர வேட்டுவர்
 + மயில வேட்டுவர் மாடந்தை வேட்டுவர்
 + மாச்சாடி வேட்டுவர் மாந்தப் படை வேட்டுவர்
 + மான வேட்டுவர் முரட்டு வேட்டுவர்
 + முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர்
 + முழக்க வேட்டுவர் முளை வேட்டுவர்
 + முன்னை வேட்டுவர் மூளை வேட்டுவர்
 + மூல வேட்டுவர் மொயர வேட்டுவர்
 + மோளை வேட்டுவர் மோக்காளி வேட்டுவர்
 + மின்ன வேட்டுவர் பலகை வேட்டுவர்
 + பலத வேட்டுவர் பறவை வேட்டுவர்
 + பரப்பள வேட்டுவர் பத்திர வேட்டுவர்
 + பாண்டிய வேட்டுவர் பாசறை வேட்டுவர்
 + பால வேட்டுவர் பாரி வேட்டுவர்
 + பிரம்ப வேட்டுவர் பீச்ச வேட்டுவர்
 + புன்னாடி வேட்டுவர் புதர வேட்டுவர்
 + புன்ன வேட்டுவர் புட்ப வேட்டுவர்
 + புலி வேட்டுவர் புள்ளை வேட்டுவர்
 + பூச்சந்தை வேட்டுவர் பூவாணிய வேட்டுவர்
 + பூலுவன் உத்தரர் பூலுவன் குப்பகள்
 + பூலுவன் செய்யகள் பூலுவன் பெரும்பற்றார்
 + பூலுவன் மயிலர் பூலுவ வேட்டுவர்
 + பூழை வேட்டுவர் பெயர வேட்டுவர்
 + பெருமாள் வேட்டுவர் பேரீஞ்சை வேட்டுவர்
 + பொன்ன வேட்டுவர் மினுக்க வேட்டுவர்
 + மீள வேட்டுவர் மின்ன வேட்டுவர்
 + ராசி வேட்டுவர் வராக வேட்டுவர்
 + வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர்
 + வாகை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர்
 + விளக்கு வேட்டுவர் வில்லி வேட்டுவர்
 + விறகு வேட்டுவர் வினைய வேட்டுவர்
 + வீர வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர்
 + வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர்
 + வேல் வேட்டுவர் வேந்தை வேட்டுவர்
 + வேதகிரி வேட்டுவர் ஜெய வேட்டுவர்
 + ஜெயவேந்த வேட்டுவர்
 +
 +கரூவூர்க் கல்வெட்டில் பூவாணிய – திருவெஞ்சமாக் கூடல் கல்வெட்டில் கரடி,​ உயர – வெங்கம்பூர் கல்வெட்டில் புல்லி – குட்லாம் பாறைக்(நாமக்கல் வட்டம் வாழவந்தி அருகில்) கல்வெட்டில் இரும்புளை – பூலாம்பட்டி சோழப்பாறைக்(சங்ககிரி வட்டம்) கல்வெட்டில் பால – மதுரகாளியம்மன் ஓடையருகே உள்ள ஏரிக்கல்வெட்டில் (சங்ககிரி வட்டம்) வெங்கச்சி –மோழப்பாறைக் கல்வெட்டில் சுண்டை - 
 +ஏமூர் மாரியம்மன் கோயில்(நாமக்கல் வட்டம்) கல்வெட்டில் கிழங்க பழமங்கலம் (பெரியார் மாவட்டம்) கல்வெட்டில் கரைய. அந்தியூர்க்
 +(பவானி வட்டம்) கல்வெட்டில் பாசறை – கிடாரம்(கோபி வட்டம்) கல்வெட்டில் பூச்சந்தை – முதலான வேட்டுவ குலப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேட்டுவர் புகழ்பாடும் குருகுல காவியம்,​ பஞ்சவர்ண ராஜ காவியம் ஆகியவை வேட்டுவரின் பல்வேறு குலங்களைச் சுட்டுகின்றன.
 +வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகரதங்கமணி
 +
 +=====நன்றியுரை=====
 +இக்கட்டுரையை இணைய தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதி அளித்த வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகர தங்கமணி
 +அவர்களுக்கும்,​ இக்கட்டுரை ஆவணத்தை வழங்கிய கொங்கு மண்டல வரலாற்று ஆய்வாளர் திரு.பூலுவராஜன் அவர்களுக்கும்,​ நமது
 +சமூக வரலாற்று கட்டுரைகளை இணைய தளத்தில் பதிப்பித்து எனக்கு ஊக்கம் அளித்து வரும் திரு.எம்.எஸ்.மோகன்குமாரவேல் (பெங்களூர்) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 +அன்புடன்
 +ஆர்.முத்துசாமி(9940701039)
 +புஞ்சை புளியம்பட்டி