வேட்டுவரின் ஒளி

வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற மாத இதழ் விரைவில் கோவையில் உதயம். கோவை ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கத்தில் இருந்து*வேட்டுவரின் ஒளி என்கிற நமது சமுதாய மாத இதழ் விரைவில் வெளிவருகிறது.

நமது சமூகத்தில் உள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதே இந்த இதழின் நோக்கம் ஆகும்.

நமது சமூகம் குறித்த முன்னேற்ற கட்டுரைகளை வரவேற்கிறோம், சிறுகதைகள்,கவிதைகள்,துணுக்குகள் அனைத்தும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் அனைத்தும் தமிழில்தான் இருக்கவேண்டும்.படைப்புக்களை இ-மெயில் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

நீங்கள் வரன் தேடுபவராக இருந்தால் உங்கள் ஜாதக முழு விவரங்களுடன் அனுப்பி வைத்தால் அதை திருமண வரன்கள் பகுதியில் வெளியிடுகிறோம்.

இந்த இதழ் நமது சமூக உறவுக்கு ஒரு பாலமாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐய்யம் இல்லை.

இந்த இதழ் சிறப்பாக வெளிவர உங்கள் பேராதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

படைப்புக்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆர்.முத்துசாமி(9940701039) பத்திரிக்கை பொறுப்பாளர் ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கம் அரசு பதிவு எண் : 247/ 2010 அலுவலகம்: 126/413 , மருதமலை மெயின்ரோடு, P.N. புதூர், கோவை – 641 041. தமிழ்நாடு